Skip to content

திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக்  மகன் முகமது அலி (37). இவர் பள்ளி வேன் டிரைவராக உள்ளார். இவர்  அந்த பகுதியில் உள்ள ஒரு  பெண்கள் பள்ளியில்  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பணியில் இருந்ததால் ஒரு மாணவியுடன் இவருக்கு   பழக்கம் ஏற்பட்டது.

தனக்கு திருமணம்  ஆகிவிட்டது.  மனைவியை  விவாகரத்து செய்து விட்டு உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று மாணவியிடம் கூறி உள்ளார். இதை  மாணவியும் நம்பி உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து  ஜாலியாக இருந்து உள்ளனர்.  கடந்த 2 வருடமாக இது நடந்து வந்துள்ளது.

இந்த விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். மேலும் ஜமாத் பெரியவர்களை வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது முகமது அலியை கண்டித்ததோடு மாணவியிடம் பழகுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

ஆனால் முகமது அலி தொடர்ந்து அந்த மாணவியிடம் பழகி அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததால் மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முகமது அலி  மீது வழக்கு பதிந்தனா். இதை அறிந்த முகமது அலி  தலைமறைவாகி விட்டார். அவரை   போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!