திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலணியில் கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த பெண் குழந்தைகளுடன் மாயமாகி உள்ளது குறித்து பெண்ணின் அண்ணன் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
மாத்தூர் விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் சிராஜுதீன் இவரது தங்கைபெனாசீர் ( 37 ) இவர் தேவைக்கோட்டையை சேர்ந்த காஜாமைதீன் என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து காஜா மைதீன் சென்னையில் வசித்து வருவதாகவும் இந்த நிலையில் பெனாசீர் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலனியில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி சிராஜுதீன் தனது தங்கை வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது தங்கையையும் தங்கை குழந்தையையும் காணவில்லை.
வீடு பூட்டப்பட்டிருந்தது அக்கம் பக்கத்தில் விசாரித்த பொழுது அவர் 26ம் தேதி இருந்தார் என்றும் பின்னர் காணவில்லை எனும் கூறியுள்ளனர்.
அதன் அடிப்படையில் பல இடங்களில் பெனாசீரை சிராஜீதன் தேடி உள்ளார் ஆனால் பெனாசீர் கிடைக்கவில்லை இதற்கு இடையில் பெனாசீர் செல்போனில் இருந்து பிரபாகரன் என்பவர் சிராஜுதீனிடம் பேசியுள்ளார் அவர் பெனாசீரை திருமணம் செய்து கொண்டு வழ்வதாகவும் இரண்டு குழந்தைகளும் தான் வைத்துள்ளதாகவும் தங்களை தேட வேண்டாம் என கூறி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக சிராஜுதீன் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பெனாசீர் மற்றும் அவரது இரண்டு மகன்களையும் தேடி வருகின்றனர்.