திருச்சி, எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகரை சேர்ந்தவர் ரஹமத் நிஷா. இவரது மகள் ரூபினா பர்வீன் ( 20). இவர் பி.காம் பட்டதாரி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இது குறித்து அவரது தாய் ரகமத்நிஷா எடமலைப்பட்டி புதூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான ரூபினா பர்வினை வலைவீசி தேடி வருகின்றனர். திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம்பெண் யாராலும் கடத்தப்பட்டுள்ளாரா? அல்லது வேறு எதாவது காரணமா என பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.