திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது பெண். அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்ததாகவும், வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தபோது அந்த வழியாக அந்தப் பெண்ணின் தோழியின் அண்ணன் காந்தலுரை சேர்ந்த சகாயம் மகன் பிரேம் (24) என்பவன் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்துள்ளான் .
அப்பொழுது அந்த பெண்ணிடம் தான் கொண்டு போய் வீட்டில் விடுவதாக கூறி அழைத்துள்ளான் தோழியின் அண்ணன் என்பதற்காக அந்த பெண்ணும் பிரேமின் இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றுள்ளார் .இந்த நிலையில் பிரேம் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் வேறு மறைவான இடத்திற்கு தப்பான நோக்கத்துடன் அழைத்துச் சென்றுள்ளான் .இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவனது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்து தப்பித்தப்போது அந்தப் பெண்ணின் இரண்டு கால் முட்டிகளும் அடிபட்டுள்ளது .பின்னர் அங்கிருந்து ஓடி வந்துள்ளார்.
இதை பார்த்த அங்குள்ள ஏ சி இ பி எப் நிறுவனத்தில் இருந்த காவலர் ஒருவர் அந்த பெண்ணை வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அப்பெண் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.