திருச்சி மாவட்டம் கீழவாளாடி அருகே உள்ள சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சிலம்பு என்ற சிலம்பரசன் . இவர் தாளக்குடியை சேர்ந்த ஐடிஐ மாணவி(17வயது) ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் அடிக்கடி போனில் பேசி காதலை வளர்த்தனர்.
இந்த நிலையில் கடந்த 13-4-2024 தேதி சிலம்பரசன் தனது காதலியை தனியாக பேச வேண்டும், தாளக்குடி பஸ் நிலையத்துக்கு வா என அழைத்து உள்ளார். அவரும் காதலனிடம் பேசுவதற்காக சென்று உள்ளார்.
அப்போது சிலம்பரசன், இங்கு சரியான சூழ்நிலை இல்லை. அருகில் என் நண்பர் வீடு இருக்கு அங்க போய் பேசலாம் என தனது டூவீலரில் அழைத்துக்கொண்டு நம்பர் 1 டோல்கேட் மாருதி நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே 5 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது காதலிக்கு குளிர்பானம் கொடுத்து உள்ளார் சிலம்பரசன். குளிர்பானம் குடித்ததும் காதலிக்கு மயக்கம் ஏற்படவே சிலம்பரசன் உள்பட அங்கிருந்த நண்பர்களும் காதலி யை பலாத்காரம் செய்தனர். பின்னர் காதலயை நிர்வாணப்படுத்தி வீடியோவும் எடுத்துக்கொண்டனர்.
மயக்கம் தெளிந்த பிறகும் அவர்கள் பலாத்காரம் செய்து உள்ளனர். இதுபற்றி யாரிடமாவது சொன்னால் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுவோம் என கூறி மிரட்டி அனுப்பி விட்டனர். பின்னர் மாணவி விடுமுறைக்கு வரும்போதெல்லாம் சிலம்பரசன், தனது காதலியை அழைத்து உறவு கொண்டு உள்ளார்.
இதனால் காதலி கர்ப்பமானார். அதன் பிறகே வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தது.எனவே காதலியின் தாயார் சென்று சிலம்பரசனிடம் கேட்டபோது, அவர் எதுவும் தெரியாதது போல கூறி மிரட்டினார். பின்னர் ஒத்துக்கொண்டார். இந்த நிலையில் கடந்த 20 நாட்ளுக்கு முன் சிலம்பரசன் காதலிக்கு மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்து உள்ளார். அதன் பிறகுகாதலியின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று பாதிக்கப்பட்ட காதலியும், அவரது தாயாரும் திருச்சி வந்து எஸ்.பியிடம் புகார் மனு கொடுத்தனர். அப்போது காதலியின் தாயாா் கூறும்போது, சிலம்பரசன்… நான், லால்குடி டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உறவினர் என்றும் கூறி மிரட்டுகிறார். அமைச்சர் ஒருவரிடம் டிரைவராக இருப்பதாகவும், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும் மிரட்டுகிறான் என்றும் கூறினார்.