நடுத்திருச்சி பெல் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (45) இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா திருச்சியில் நெடுஞ்சாலை துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் 11 வயதில் ஒரு மகள் உள்ளனர்.
சந்திரசேகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும் இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் சந்திரசேகரன் திருவெறும்பூர் அருகே உள்ள ஐடிஐ பகுதியில் குடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்த பொழுது அடையாளம் மற்றும் முகவரி தெரியாத 5 பேர் சந்திரசேகரை தாக்கி உள்ளனர் இதில் பலத்த காயம் அடைந்த தோடுசந்திரசேகர் கால் முறிந்தது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது சம்பந்தமாக சந்திரசேகர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரி பேரில் திருவெறும்பூர் போலீசார் விசாரணை செய்த பொழுது சந்திரசேகரை தாக்கியது மனைவி வெண்ணிலா மற்றும் வெண்ணிலாவின்குடும்பத்தினர் மற்றும் குடும்ப நண்பர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் வெண்ணிலாவின் தம்பி திண்டுக்கல் ரெட்டியார்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் தனுஷ்கோடி (27) அவரது நண்பன்திண்டுக்கல் பாரதிபுரம் தூது நகரை சேர்ந்த சாகித்அலி உட்பட எட்டு பேர் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சாகித் அலி மற்றும் தனுஷ்கோடி ஆகிய இருவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
குடிகார கணவனை , மனைவியான நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் குடும்பத்துடன் சேர்ந்து அடித்து காலை முறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.