திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா ஆமூர் கீழக்கொட்டூர் அண்ணா நகரை சேர்ந்தவர் 45 வயது ஜெயலட்சுமி. அதே பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதான மஞ்சுளா.அதேபோல் முசிறி தாலுகா கரைவழி மேலத்தெருவை சேர்ந்தவர் 26 வயதான சுப்பிரமணி. இவர் திருமணம் முடித்து தற்போது கீழக்கொட்டூர் அண்ணா நகரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று ஜெயலட்சுமி தனது கணவருடன் தெருவில் உள்ள குடிநீர் கழாயில் குடிநீர் பிடிப்பதற்காக வந்துள்ளார்.அப்போது சுப்பிரமணி நண்பர்களுடன் அங்கு நின்று கொண்டிருந்தார். மேலும் சுப்பிரமணி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுப்பிரமணி ஜெயலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். இதனை ஜெயலட்சுமி மற்றும் அங்கிருந்த மஞ்சுளா தட்டி கேட்டுள்ளனர்.இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி இருவர் மீதும் கை மற்றும் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் பட்ட இருவரும் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து விஜயலட்சுமி வாத்தலை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வாத்தலை சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.