திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்தவர் ஜான் பெரோஸ் இவர் கழிவுநீர் தொட்டி சுத்திகரிக்கும் வாகனம் வைத்து வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்தமிழ் வயது (24) இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்னரை ஆண்டுகள் ஆகிறது. 5 மாதத்தில் ஒரு கை குழந்தை உள்ளது. இந்நிலையில் முத்தமிழ் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜான் பெரோஸ் வேலைக்கு போய்விட்டு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்கம் கதவு தாளிடப்பட்டிருந்தது உள்ளது. அதனால் ஜான் பெரோஸ் ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது வீட்டில் அறையில் பேன் மாட்டும் ஊக்கில் முத்தமிழ் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முத்தமிழை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முத்தமிழை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே முத்தமிழ் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் ஜான் பெரோஸ் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதோடு திருமணம் ஆகி ஒன்னரை ஆண்டுகளே ஆவதால் திருச்சி ஆர்டிஓ விசாரணை செய்து வருகிறார்.
