திருச்சி மாவட்டம் லால்குடி ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் டெஸ்டிமோனா. இவர் ஆலங்குடி மகாஜனம் கிராமத்தில் விஏஓ-வாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது தாயார் இசபெல்லா ராணி லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் கையில் அணிந்திருந்த 2 சவரன் தங்க வளையல் திருட்டு போனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தங்க வளையலை மர்ம நபர்கள் யாராவது திருடி சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில், டெஸ்டிமோனா நகை திருடு போனது குறித்து லால்குடி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.