Skip to content

திருச்சி ஜிஎச்-ல் மூளைச்சாவு அடைந்த வாலிபர்… உடல் உறுப்புகள் தானம்….

  • by Authour

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், 9 முறையாக மூளை சாவு அடைந்தவர் உடலில் இருந்து சிறுநீரக உறுப்பு எடுப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம், மைலம்பட்டி, கோட்டை கரியாப்பட்டி ஊரைச் சேர்ந்த 23வயது மதிக்கத்தக்க நபர் சாலை விபத்து ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் 20.09.2023 அன்று மாலை 07.15 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு 22.09.2023 அன்று காலை 11.37 மணியளவில் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இறந்தவரின் உறவினர்கள் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தார். மேலும் அவருடைய உடல் உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர்.

மேலும் Transtan வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின் படி, தகுதியான நபருக்கு தானமாக பெறப்பட்ட உறுப்புகளில், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தொடர்ச்சியாக இரத்தசுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு ஒரு சிறுநீரகம், இம்மருத்துவமனை முதல்வர் நேரு தலைமையில் மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் மேற்பார்வையில் மருத்துவ நிலைய அலுவலர் ராஜ்மோகன் வழிகாட்டுதலின்படியும் அமைக்கப்பட்ட மருத்துவ

குழு மூலம் இந்த அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சைக்குழு ஜெயபிரகாஷ் நாராயணன், ரவி ,பரணி, பிரபாகரன், சந்தோஷ்குமார் மற்றும் சிறுநீரக மருத்துவ குழு மருத்துவர் கந்தசாமி, பிரகாஷ், மைவிழிசெல்வி, மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் கவிதாராணி, பிரியதர்ஷினி, மற்றும் செவிலியர் ராஜராணி மற்றும் செவிலியர் உதவியாளர் குழு ஆகியோர் மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக, வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 19-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும். மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும். கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், இரண்டு கண்விழிகளும் இரண்டு பயனாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *