திருச்சி காந்தி மார்க்கெட் சந்தையை பொறுத்தவரை திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர்,கரூர், புதுக்கோட்டை போன்ற சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் பூக்கள் மஞ்சள் கொத்து கரும்பு போன்ற பொருட்களை வாங்குவதற்காக மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள்.
அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று காலை முதலே அலை மோதி வருகிறது – உங்கள் பண்டிகை நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்களுக்கு
தேவையான பொருட்களை வாங்குவதற்காக மொத்த வியாபாரிகளும் பொதுமக்களும் காந்தி மார்க்கெட்டில் கூடியதால் காந்தி மார்கெட் பகுதி முழுவதும் விறுவிறுப்பாக காட்சி அளித்தது.
திருச்சி காந்தி மார்கெட்டில் :
மல்லிகைப்பூ கிலோ நேற்று 2200க்கு விற்கபட்டது – இன்று 2500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
காக்கட்டான் நேற்று 800 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 1200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
உச்சி பூ நேற்று 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று 100 ரூபாய் உயர்ந்த 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
செவ்வந்தி கிலோ நேற்று 100 ரூபாய் – இன்று 120 ரூபாய்க்கு விற்பனை
சம்மங்கி கிலோ 140க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 160 ரூபாய்க்கு விற்பனை.
ரோஸ் இன்று கிலோ 350க்கு விற்பனை – காந்தி கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை.
இதை தவிற திருச்சி காந்தி மார்க்கெட் சந்தையில் மஞ்சள் கொத்து ஜோடி 50 ரூபாய்க்கும் – கரும்பு ஒரு கட்டு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் விற்பனைப்பு செய்யப்பட்டு வருகிறது.