திருச்சி மாநகர் எடத்தெரு ரோடு, பிள்ளைமா நகரை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது 2-வது மகன் யோகராஜ் (வயது 29). இவர் காந்திமார்க்கெட் பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். வயிற்று வலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் விரக்தியில் இருந்த யோகராஜ் வீட்டில் மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் அய்யம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளி தற்கொலை… போலீசார் விசாரணை
- by Authour
