தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் தலைப்பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு காய்கறிகள் வாங்குவதற்காக அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. உழவர்களுக்கு நன்றி சொல்லும் திருநாளான இந்த பண்டிகையின் போது அனைத்து காய்கறிகளும் படைத்து புத்தாடை உடுத்தி குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாடுவது மரபாக உள்ளது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொங்களுக்கு தேவையான பொருட்களை
வாங்குவதில் அதிகாலையில் இருந்து மக்களின் கூட்டம் அலைமோதியது. கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டு வந்து காய்கறிகள், பூக்கள், மஞ்சள் கொத்து, என பொங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி செல்கின்றனர். காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இரவு நேரங்களில் விடிய, விடிய இந்த சந்தை கலகலப்பாக இயங்கும். தற்போது பொங்கல் பண்டிகைக்காக இங்கு வரும் காய்கறி வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டமும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.