திருச்சி காந்தி மார்கெட் அருகே செயல்படும் டீ கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் திருச்சி கமிஷனர் காமினி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு சுமார் ஒன்னறை கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனையடுத்து காவல் துறை ஆணையர் காமினி முன்னிலையில்
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரமேஷ் பாபு கடைக்கு சீல் வைத்தார். அதே போல பாலக்கரை பகுதியில் செயல்பட்ட கடையிலும், சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்ட கடையிலும் குட்கா பொருள் விற்பனை செய்ததால் அந்த கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.