திருச்சி, காந்தி மார்க்கெட் போலீஸ் சரத்துக்கு உட்பட்ட தஞ்சை ரோடு பகுதியில் கட்டுமான பொருட்கள் கடை வைத்து நடத்தி வருபவர் அப்துல்லா. இவர் சம்பவத்தன்று இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் மூன்று சிறுவர்கள் கடையின் பூட்டை உடைத்து அதிலிருந்து 50,000 மதிப்புள்ள லேப்டாப் ஐ திருடிக்கொண்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து அப்துல்லா காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த மூன்று சிறுவர்கள் பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கட்டுமான கடையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று சிறுவர்களையும் கைது செய்து திருச்சி இபி ரோட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.