திருச்சி, பொன்மலை ஜி- கார்னர் ரயில்வே மேம்பாலம் நேற்று முன்தினம் பழுதடைந்தது. இதனால் அந்தப் பாலத்தில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பழுதடைந்த பாலத்தை இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில்
மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன், கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.