திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே தமிழ்க விவசாயிகளின் பாதுகாப்பு சங்க அமைப்பின் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத்தின் ஏழாவது நாளான இன்று விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர், தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு செவி சாய்த்து உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என போராட்டத்தில் கூறினார். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என கலந்து கொண்டு கறவை மாடுகளுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . நெல் குவின்டாலுக்கு 3000 வழங்க வேண்டும், கறவை மாடுகளில் பால் விலையினை எருமைப்பால் லிட்டர் 75 ரூபாய்க்கும் பசும்பால் லிட்டர் ஒன்று 50 ரூபாய்க்கும் விலை உயர்த்தி தரவேண்டும் என்றும் , மேலும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 5000 , மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு பதினைந்தாயிரம் ரூபாயும் வெங்காயம் டன் ஒன்றுக்கு 45 ஆயிரம் ரூபாயும் விலைப்பொருள்களுக்கு விலைகளை அரசுநிர்ணயம் செய்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர், மேலும் 100 நாள் பணியாளர்களின் வேலைகளை மாற்றியமைத்து விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த அரசாணை வெளியிட வேண்டும் என்றும்
கூறினர், நிகழ்ச்சியில் பொம்மனப்பாடி அழகேசன் தலைமை வகித்தார், மாவட்டஒருங்கிணைப்பாளர் ஓசரப் பள்ளி
ஜெயராஜ, பங்காரு சாமி, மாவட்டஅவைத் தலைவர் முருங்கபட்டி நடராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் பொன்மாறன்,
கொப்பம்பட்டி லயன்ஸ் ராமராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனர், ஓசரப்பள்ளி ரமேஷ் வரவேற்புரையாற்றினார். நாக நல்லூர்
காளிமுத்து, நல்லுசாமி, கனகராஜ், விஸ்வம் பால் சமுத்திரம், மணிகண்டன், உட்பட 100ற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர் இறுதியில் லைன்ஸ் மணி நன்றியுரை கூறினார்.