தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் கடன் தள்ளுபடி கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 11 – வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென்று காவிாி ஆற்றில் உள்ளே இறங்கி போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் வந்து அவர்களை ஆற்றுக்குள் இருந்து வெளியே மீட்டு கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது.. ..
தொடர்ந்து 11- வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்களுடைய போராட்டம் தீவிரமடையும் என்றார்.