தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
திருச்சி சிந்தாமணி பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 37வது நாளாக நரிக்குறவர்கள் நடனமாடி பாடல் பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் கரூர் பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட பகுதிகளும் இருந்த பொழுது நரிக்குறவர்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தை தற்பொழுது அரசு திரும்ப பெற்றுள்ளது எனவும் நரிக்குறவர்களுக்கு வழங்கிய அதே இடத்தை அரசு திரும்ப தர வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் நரிக்குறவர்கள் தொடர் காத்திருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் 37வது நாளான இன்று விவசாயிகள் அரை நிர்வாணத்துடனும் நரிக்குறவர்கள் நடனமாடியும் பாடல் பாடியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.