திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மண்டல செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து ஏரி குளங்களையும், கிளைப்பாசன வாய்க்கால்களையும் தூர்வாரியும், தடுப்பணைகளை புணரமைக்கப்படுதல் வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகாவில் அணைக் கட்டியே தீருவேன் என்கிற முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகத்திற்கு கர்நாடக வழங்கி வேண்டிய 92 டி.எம்.சி தண்ணீரை தமிழக முதலமைச்சர் குறுவைக்கும், சம்பாவுக்கும் பெற்றுத்தர கோரியும் ஜூன் 8-ந்தேதி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கமும், தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சியும் இணைந்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்காச்சோளத்திற்கு வறட்சி நிவாரணம் விட்டுபோனவர்களுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கோனேரி ஆற்றில் தடுப்பணைக் கட்ட வேண்டும்.
அரியலூர் மாவட்டம், துத்துரையும், தஞ்சை மாவட்டம் வாழ்க்கை கிராமத்தையும் இணைத்து கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும்.
இலவச விவசாய மின் இணைப்பு காலதாமதப்படுத்தாமல் வழங்கவேண்டும்.
கரூர் மாவட்டத்தில், அரவாக்குறிச்சி, வேலாயுதம் பாளையம் தாலுக்காவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட வெற்றிலை கொடிக்கால் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
சுவேதா நதி ஆற்று தண்ணீர் வெள்ளையூர் ஏரிக்கு கொண்டுவர சேலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைக்க வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நட்டு மரங்களை உருவாக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது மழைக்கு முன்பாக தார்சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படுதல் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது .