திருச்சி, தாரா நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியா இவரது கணவர் சுரேஷ்குமார் (49).இவர் திருச்சி வனத்துறையில் உதவி வனவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 ந்தேதி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சுரேஷ் குமார் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக வீட்டில் உள்ளவர் பதறி அடித்து கொண்டு அவரை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுரேஷ் குமார் பரிதபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில்காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
