சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்புத்துறையில் திருச்சி மாவட்ட அதிகாரியாக இருப்பவர். கடந்த ஆட்சியிலும் இந்த பதவியில் தான் அவர் இருந்தார். ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பது போல தொடர்ந்து அதே பதவியில் நீடிக்கிறார்.
அவ்வப்போது திடீர் ஆய்வு என்ற பெயரில் அவர் சில நேரங்களில் மாநகரில் சில இடங்களுக்கு செல்வதும் திடீர் ஆய்வு என அழைக்கப்படும் அந்த ஆய்விற்கு முன்னர் சம்மந்தப்பட்ட இடத்தில் 3 அல்லது 4 பத்திரிகையாளர்கள் கேமிராக்களுடன் தயாராக இருப்பார்கள் என்பது தான் வேடிக்கை. திருச்சி நகரில் உள்ள பெரிய ஓட்டல்கள் மற்றும் பிரியாணிக்கடைகள் குறித்து புகார்கள் என்றாலும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள் தான் அந்த டீம்மின் இலக்கு. பான் பராக், குட்கா விற்கப்படுகிறது என பரபரப்பான ஆய்வை நடத்தி அடுத்த சில நிமிடங்களில் படங்களுடன் செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வரும்.. சம்மந்தப்பட்ட அந்த அதிகாரியின் திடீர் ஆய்விற்கு குறிப்பிட்ட பத்திரிக்கையாளர்கள் மட்டுமே செல்வது வழக்கம் என்றும் அவர்களுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிக மீது அப்படி ஒரு “தனிபாசம்” என்கின்றனர் அந்த துறையில் மற்ற ஊழியர்கள்.. அதே போல் இன்றும் திருச்சியில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதற்கும் வழக்கம் போல் சில பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் போன்.. இந்த முறை அதிகாரி மட்டும் அல்ல பெரிய போலீஸ் அதிகாரிக்கும் அழைப்பு. புதிய அதிகாரி என்பதாலும் “ஆய்வு அதிகாரி” பற்றி முழுவதும் தெரியாமல் அந்த போலீஸ் அதிகாரியும் சென்று விட்டார்….குறிப்பிட்ட சேனல்களில் செய்திகள் வந்ததால் மற்ற பத்திரிக்கையாளர்கள் போலீஸ் அதிகாரியின் அலுவலகத்திற்கு போன் செய்து ஏன் எங்களுக்கு அழைப்பு இல்லை என கேட்டப்பிறகு தான் சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு விஷயம் தெரியவந்துள்ளது.. சம்மந்தப்பட்ட ஆய்வு அதிகாரி கடந்த ஆட்சியில் அதிமுக அமைச்சர் ஒருவரின் படத்தை சட்டைப்பையில் வைத்தக்கொண்டு தான் சோதனை நடத்துவார் என்பதனை நினைவு கூறுகிறார் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் ..