Skip to content

திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு: 113 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஷார்ஜா / மலேசியா சிங்கப்பூர் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவிலான விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது . இந்த விமானத்தில் 113 பயணிகள் பயணம் செய்வதற்காக விமானத்தில் அமர வைக்கப்பட்டு விமானம் ரன்வேயில் சற்று தூரம் சென்றது .

அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் விமானம் ஏப்ரான் பகுதிக்கு( பயணிகள் ஏறி, இறங்கும் இடம்)  கொண்டுவரப்பட்டது .  சரியான நேரத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால்  113 பயணிகளும் பாதுகாப்புடன்  இறங்கினர். இதன் பின்னர் தொழில் நுட்ப வல்லுநர்கள்  வரவழைக்கப்பட்டு விமான கோளாறைசரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் சரி செய்வதற்கு தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து விமானத்தில் அமர வைக்கப்பட்ட 113 பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு ஓய்வு அறையில் அமர வைக்கப்பட்டனர் . பின்னர் பயணிகளுக்கு குடிநீர் மற்றும் உணவு வகைகளை விமான நிறுவனத்தினர் வழங்கினர்.

மீண்டும் விமானம் புறப்படும் நேரம் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை சரி செய்த பின்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 113 பயணிகளும் பெரும்  சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

error: Content is protected !!