திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏரியில் இன்று மீன் பிடித்திருவிழா நடைபெற்றது .
கோடை காலத்தை முன்னிட்டு ஏரியில் உள்ள நீர் வற்றுவதனால் அங்கு வளர்க்கப்பட்ட மீன்களை ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் மீன்பிடிப்பதற்காக அனுமதி வழங்கியது .அதனை தொடர்ந்து இன்று ஏரியில் மீன் பிடிக்க பொதுமக்கள் காலையில்
திரண்டிருந்தனர் சிறியவர் முதல் பெரியவர் வரை அவரவர் தங்கள் கையில் மீன்பிடிப்பதற்கான தூண்டில் வலை போன்ற ஆயுதங்களை கொண்டு வந்திருந்தனர் ஊராட்சி மன்ற தலைவர் லதா தனபால் காலையில் பொதுமக்களை ஏரியில் இறங்க அனுமதி அளித்ததும் கரைமேல் நீண்டிருந்த பொதுமக்கள் ஆர்வமுடன் ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர் இதில் கெண்டைமீன். கெளுத்தி மீன் இறால் மீன் ஆகிய மீன்களை பிடித்து கூடையில் வைத்து மகிழ்ச்சியாக வீட்டிற்கு எடுத்துச் சென்று மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.