திருச்சி தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிலால் (வயது 35). இவர் சம்பவத்தன்று தர்பார் மேடு பஸ் நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். தனது செல்போனை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு அருகில் உள்ள டீ கடைக்கு சென்று உள்ளார். அப்போது திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது சலீம் (41) என்பவர் பிலால் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் உள்ள செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார். உடனே இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் அவரை விரட்டி சென்று கையும் களவுமாக பிடித்தனர். இப்புகாரின் பெயரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது சலீமை கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மீன் மார்கெட்டில் செல்போன் திருடிய வாலிபர்…. போலீசிடம் ஒப்படைப்பு..
- by Authour
