திருச்சி, கன்டோன்மெண்ட் எஸ். பி. ஓ. காலனியை சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மகள் அபிநயா (18). இவர் வீட்டில் விளக்கு ஏற்றியபோது, எதிர்பாராதவிதமாக அவரது நைட்டியில் தீப்பிடித்துள்ளது. இதில் அபிநயா மீது மள, மளவென தீ உடல் முழுவதும் பரவியுள்ளது. இதில் அபிநயா அலறி துடித்துள்ளார். உடனடியாக அபிநயாவை படுங்காயங்களுடன் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செசன்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.