Skip to content
Home » திருச்சியில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் தீ விபத்து…பரபரப்பு..

திருச்சியில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் தீ விபத்து…பரபரப்பு..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் மின்சார கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தை அணைப்பதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் உட்பட 5 வாகனங்கள் போராடி வருகின்றன.

திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான  எழில் நாகம்மை வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகம் இரண்டு மாடிகளை கொண்டுள்ளது. இதில், பேன்சி ஸ்டோர், பிரிண்டிங் பிரஸ், மளிகை கடை, போட்டோ ஸ்டூடியோ,  பாத்திர கடை, தனியார் கொரியர், இரண்டு தனியார்  நிதி நிறுவனங்கள் (கும்பகோணம் மற்றும் பஜாஜ் ) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் இன்று மாலை வினோத் என்பவர் தரைத்தளத்தில் வைத்துள்ள பேன்சி ஸ்டோர் கதவை மட்டும் சாத்தி வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

 

இந்த நிலையில் பேன்சி ஸ்டோரில் இருந்து மின்சாரக் கசிவினால் புகை வர தொடங்கியுள்ளது பின்னர் அதிக அளவில் புகை வந்ததுடன் பேன்சி ஸ்டோரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து உடனடியாக அப்பகுதி மக்கள் நவல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

 

இந்நிலையில் விபத்தினால் புகை மூட்டங்கள் வணிக வளாகம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து வணிக வளாகத்தில் உள்ள மற்ற கடை மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள் அங்கிருந்து தப்பித்தால் போதும் என அருகில் உள்ள வணிக வளாகத்தில் தாண்டி தப்பித்தனர்.

 

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு நவல்பட்டு, துப்பாக்கி தொழிற்சாலை, பிஹெச்எல் இரண்டு தீயணைப்பு

வாகனம் என மொத்தம் 5 தீயணைப்பு வாகனம் மற்றும் ஒரு தண்ணி லாரி 6 வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

 

இந்த நிலையில் இச் சம்பவம் பற்றி திருவெறும்பூர் மின்சார வாரிய அலுவலர்களுக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக திருவெறும்பூர் மின்சார வாரிய ஊழியர்கள்  அப்பகுதியில் மின்சார விநியோகத்தை நிறுத்தியுள்ளனர்.

 

மேலும் தீயினால் ஏற்ப்பட்ட | புகை மண்டலத்தினால் தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது பின்பு அவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் உள்ளே சென்று தீயை

 

தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைத்தார்

திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் விரைந்து வந்துவணிக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீயை அனைப்பற்கு உதவி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *