திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றம் மைதானத்தில் துணிக்கடை ஒன்று இயங்கி வந்தது. நேற்றிரவு அந்த துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ மள மளவென கடை முழுவதிலும் பரவியது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.. இந்த தீ விபத்திற்க காரணம் தெரியவில்லை..