திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அகிலாண்டபுரத்தில் முன் விரோதத்தில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 13 பேர் மீது வழக்கு பதிவு. 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாளக்குடியைச் சேர்ந்த புறாமணிகண்டன், அப்பாஸ், நெப்போலியன், வேல்முருகன், மோகன் குமார், உதயா, கீரமங்கலத்தைச் சேர்ந்த பரந்தாமன், ராஜதுரை, பிச்சாண்டவர் கோயிலைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவர்களுக்கும் அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், மித்ரன், ரஞ்சித் மற்றும் லால்குடி சேர்ந்த சாந்தகுமார் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
உடைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அகிலாண்டபுரத்தில் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது அகிலாண்டபுரத்தில் நாட்டு வெடிகுண்டை வீசி அறிவாளால் வெட்டி உள்ளனர். இதில் சுரேஷ் மித்ரன் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் மேலும் அப்பகுதியில் சென்ற தனியார் பள்ளி பேருந்தின் கண்ணாடியும் புடைத்துள்ளனர் இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் சம்பவ இடத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் வந்து விசாரணை செய்தார்.
மேலும் எஸ்பி வருன்குமார் விரைவில் குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார் அதன்படி லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் சமயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தனிப்படை அமைத்து தகராரில்
ஈடுபட்ட குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சமயபுரம் போலீசார் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட மேற்கண்ட 13 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.இதில் தாளக்குடியைச் சேர்ந்த நெப்போலியன், வேல்முருகன், மோகன் குமார், கீரமங்கலத்தைச் சேர்ந்த பரந்தாமன், பிச்சாண்டார் கோயில் சேர்ந்த மணிகண்டன், அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித், லால்குடியைச் சேர்ந்த சாந்தகுமார் ஆகிய 7 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.