தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் கடன் தள்ளுபடி உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒருவிதமாக போராட்டம் நடத்தும் இவர்கள், இன்று 12 – நாளாக தலையில் முக்காடு போட்டு நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.