திருச்சி, அரியலூர்,பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் சாகுபடி செய்j பல லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு 40ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் பங்கேற்றனர்.