Skip to content

திருச்சியில் கிடைத்த ராக்கெட் லாஞ்சர்…. செயலிழக்கம் செய்யப்பட்டது…

திருச்சி, ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள வடதீர்த்த நாத சுவாமி சிவன் கோவில் எதிர்புறம் உள்ள காவிரி ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காவிரி ஆற்றிக்கு குளிக்க சென்றவர்கள் படித்துறை அருகில்உள்ள கற்களுக்கு இடையில் ராக்கெட் லாஞ்சர் போன்ற கூம்பு வடிவான இரும்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராக்கெட் லாஞ்சரை பார்த்து குளிக்க சென்றவர்கள் பயந்து அலறியடித்து கொண்டு ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஜீயபுரம் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காவிரி ஆற்றின் கற்களுக்கு இடையே தண்ணீரில் இருந்த ராக்கெட் லாஞ்சர் போன்ற அமைப்புடைய தை போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில் அந்தநல்லூர் காவிரி்ஆற்று பகுதியில் இருந்து பற்றி அந்தநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி விக்னேஸ் வயது 32 என்பவர் ஜீயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து காவிரி ஆற்றில்

ராக்கெட் லாஞ்சர் எப்படி வந்த்து என்றும்,அதிக அளவு தண்ணீர் வரும்போது தண்ணீரில் இழுத்து கொண்டுவரப்பட்டதா என்றும், அல்லது ராக்கெட் லாஞ்சர் பயன்படவில்லை என்று யாரும் இந்த பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் விட்டு சென்றார்களா என்றும் போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுனர்கள் ராக்கெட் லாஞ்சர் காவிரி ஆற்றில் இருந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இதன் எடை 3 கிலோ 800 கிராம்எடையும்60 செமீநீளமும் உள்ளதாக இருந்த்து.

இந்த நிலையில் நேற்று மாலை முக்கொம்பு நடுக்கரை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு செயலிழப்பு. நிபுனர்கள் சுமார் 4 அடி பள்ளம் பறித்து அந்த பள்ளத்தில் ராக்கெட் லாஞ்சரை வைத்து, வெடிக்க வைத்து செயலிழக்க வைத்தனர். அப்போது பெரிய சத்தத்துடன் ராக்கெட் லாஞ்சர் வெடித்தது. நேற்று தீபாவளி பண்டிகை முடிந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு வந்திருந்தனர். அப்போது ராக்கெட் லாஞ்சரை செயலிழக்க வைக்கும் போது எந்தவிதமான அசம்பாவித மும் நடைபெறகூடாது என்று கருதி, மாலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற பிறகு ராக்கெட் லாஞ்சரை செயலிழக்கும் பணி நடைபெற்றதுஎன்பது குறிப்பிடத்தக்கது. முன்னெச்சரிக்கையாக மருத்துவகுழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!