Skip to content

திருச்சி தேர்வு மையத்தில் அமைச்சா் மகேஸ் திடீர் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று  பிளஸ்1 தேர்வு  தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 557 பள்ளிகளில் இருந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 369 பேர் எழுதினர்.இன்று மொழித் தேர்வு நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் படித்த பள்ளியான திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இ. ஆர். மேல்நிலைப் பள்ளியிலும் இந்த தேர்வு  மையம் அமைக்கப்பட்டு இருந்தது.  அமைச்சர்   மகேஸ் தேர்வு மையத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.  மாணவர்கள் யாரும் ஆப்சென்ட் ஆகி இருக்கிறார்களா என்பது குறித்து அங்குள்ள  தேர்வு கண்காணிப்பாளர்களிடம் கேட்டறிந்தார்.

 

error: Content is protected !!