திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார் லாரி டிரைவர் இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன்கள் தங்கவேல் , ஜெகன் என்கின்ற கொம்பன் (31). இவருக்கு மனைவி ஒரு மகள் உள்ளனர். தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு 2009 ம் ஆண்டு கல்லூரியில் எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்தார். கல்லூரி காலத்தில் தனது 17 வயது முதல் நண்பர்களுக்காக அடிதடியில் இறங்கினார்.
பின்பு நண்பர்கள் மூலமாக மண்ணச்சநல்லூர் பிரபல ரவுடி குணாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்பு பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டார்.
2010 – ஆண்டு பஞ்சாயத்து தலைவரை கொலை செய்யும் முயற்சி – வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
2011- கொலை முயற்சி வழக்கு – கைது
2012- அடிதடி வழக்கில் கைது.
2013- கொலை முயற்சி வழக்கில் கைது , சிறை தண்டனை
2014- திருச்சி புத்தூர் சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் கொலை வழக்கு . ( காதல் விவகாரம்)
2014- பிப்ரவரி 15 – ஆள் கடத்தல், கொலை வழக்கு – கைது , சிறை
2015- சக்திவேல் என்பர் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார். (முதல் குண்டாஸ்)
2016 – பிரபல ரவுடி சந்துரு வை கொலை செய்ய முயற்சி – கைது , சிறை தண்டனை
பின்பு கொம்பன் ஜெகன் நண்பர் மணி கொலை .
நண்பர் கொலைக்கு பழிக்குபழி தீர்க்க 3 கொலை.
2017- செப்டம்பர் – 19 திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறை பகுதியில் சசிகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது, சிறை , குண்டாஸ்
2018- ஆள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது , சிறை
2019 – பிரபல ரவுடி கொலை வழக்கில் கைது, சிறை தண்டனை
2020- டிசம்பர் -3 திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு.
2020- டிசம்பர் -23 சேலம், பிரபல ரவுடி கொலை வழக்கில் கைது.
2021- திருச்சி உறையூர் அருகே பிரபல அரிசி வியாபாரி கடத்தல் வழக்கில் கைது, குண்டாஸ்
2022- கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்கில் கைது.
2022- மே – 25 , பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பலத்த ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது. குண்டாஸ்
ரவுடி கொம்பன் ஜெகன் மீது திருச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம் ,திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், புதுச்சேரி, நாமக்கல் போன்ற இடங்களில் நேரடியாகவும் கூலிப்படையாகவும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர். கல்லூரி பருவத்தில் நண்பர்களுக்காக அடிதடியில் இறங்கி கெட்ட சகவாசத்தால், இன்று என்கவுன்டர் செய்யப்படும் நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டார்.