Skip to content
Home » திருச்சியில் ‘எனது குப்பை எனதுபொறுப்பு’…. மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்…

திருச்சியில் ‘எனது குப்பை எனதுபொறுப்பு’…. மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்…

திருச்சி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் 65 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் செயல்பாடுகளை மேயர் அன்பழகன் மற்றும் ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாநகராட்சியில் தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசல் பகுதியில் எனது குப்பை எனது பொறுப்பு’ எனும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் சேரும்

குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்குவதன் அவசியம் குறித்து இன்று அன்பழகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து வைப்பதற்காக பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மண்டலத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன், சுகாதார அலுவலர் இளங்கோவன், இளநிலை பொறியாளர் பிரசாத், மாமன்ற உறுப்பினர் கமல்பாட்சா, பள்ளிவாசல் நிர்வாகிகள், சர்குலர் வேஸ்ட் சொலுஷன்ஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!