Skip to content

திருச்சி ”எல்ஃபின்” நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏஜெண்ட் கைது….

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ் நாட்டில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை, பாண்டிசேரி ஆகிய இடங்களில் எல்ஃபின் நிதி நிறுவனத்தில் இயங்கி வந்தது. அந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும், மேலும் வீட்டு மனைகள் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, முதலீடு செய்தவர்களுக்கு அவர்களது ரொக்கத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக வந்ததாக வந்த புகார்களின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வழக்கு விசாரணையும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய நீண்டகாலம் தலைமறைவாக இருந்த எல்ஃபின் நிறுவனத்தின் விருதுநகர் மாவட்ட முகவரும், ஸ்ரீவில்லிபுதூர் வட்டம் சுந்தரபாண்டியம் அருகேயுள்ள மு.புதூர் நடுத்தெருவைச் சேர்ந்த ச. சுந்தர்ராஜன் (68) என்பவரை, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் டி.கே. லில்லி கிரேஸ் மற்றும் உதவி ஆய்வாளர் பு.மகாலெட்சுமி மற்றும் போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். எல்ஃபின் நிறுவனங்களில் நடந்த மோசடி தொடர்பாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என டிஎஸ்பி லில்லிகிரேஸ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!