திருச்சி நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் துறை வைகோவிற்கு ஆதரவாக தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்
கே என் நேரு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்கல நாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் திருச்சி பாராளுமன்றத்திற்கு மதிமுக கட்சியை சேர்ந்த துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்குளத்தில் பிரச்சாரம் துவங்கியது.
இதில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, தமிழக பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு திருஞானசம்பந்தரால் இடற்களையும் பதிகம் பாடப்பட்ட திருநெடுங்கள நாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அதன் பிறகு முறையாக பிரச்சாரத்தை தொடங்கிவைத்து நேரு பேசியதாவது
எங்களுக்கு ஒரு மலைப்பாக இருந்தது ஆரம்பத்தில் காரணம் சின்னம் எப்படி மக்களிடம் கொண்டு செல்வோம் என்று ஆனால் நேற்று திருச்சியில் வாக்கு சேகரித்த பொழுது தீப்பெட்டி சின்னம் மக்களிடம் எளிமையாக சென்று உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ட்ரெண்டை தடுக்க முடியாது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரா வாரம் தமிழகத்திற்கு வருகிறார் அவரை நாங்கள் தடுக்கவில்லை அவர் வரும்பொழுது தமிழகத்திற்கு ஏதாவது திட்டத்தை கொண்டு வந்தால் சரி, தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை கொடுத்தால் சரி
ஆனால் அவர் எதையும் செய்யவில்லை. ஆனால் ஓட்டு கேட்க மட்டும் வருகிறார். எப்படி அவருக்கு தமிழக மக்கள் வாக்குகள் செலுத்துவார்கள்.
மத்தியில் பிஜேபி அடியோடு ஒழிக்க வேண்டும் மத்திய அரசு தமிழகத்தில் மெட்ரோ திட்டம் கொண்டு வந்தால் அதற்குரிய நிதியை வழங்க வேண்டும் ஆனால் அதற்கு உரிய நிதியை வழங்கவில்லை, வெள்ள நிவாரணம் நிதி வழங்கவில்லை, தமிழகத்திற்கு உரிய ஜிஎஸ்டி தொகை 20 ஆயிரம் கோடியை வழங்கவில்லை இப்படி எந்தவித நிதியையும் தமிழகத்திற்கு வழங்காமல் கடன் வாங்குவதற்கும் அனுமதிப்பதில்லை நிதி நெருக்கடியில் தமிழகத்தை சீக்க வைக்க பார்க்கிறது.
திமுக கூட்டணிக்கு தமிழகத்தில் வாக்களித்து அவர்களை அகற்றுவதற்கு இப்பகுதியில் உள்ள வேட்பாளர் வெற்றி பெற்றால் தான் நமது தேவைகளை அறிந்து அதற்கு தேவையான திட்டங்களை பெற்று செயல்படுத்த வாய்ப்பாக இருக்கும் இந்த பாராளுமன்ற தொகுதியில் மதிமுகவை சேர்ந்த எல் கணேசன், திருநாவுக்கரசு ஆகிய கூட்டணி கட்சி வேட்பாளர்களை எப்படி திமுகவினர் வெற்றி பெற செய்ய வைத்தார்களோ அதே போல் தோழமையுடன் கட்சிகளுக்கு உறுதுணையாக துறை வைகோவை வெற்றி பெற வைப்போம் என்றார்.
அன்பின் மகேஸ் பொய்யாமொழி வேட்பாளருக்கு அவரது சின்னமான தீப்பெட்டி சின்னத்தை மாலையை அணிவித்து பேசியதாவது
முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிலிண்டர் விலையை ரூபாய் 500 ஆக குறைப்போம் என்னும் 500 ரூபாய்க்கு வாங்குவீர்களா ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவீர்களா? பெட்ரோல் விலையை 75 ரூபாய்க்கு டீசல் விலையை 65 ரூபாயும் குறைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார். எனவே பொதுமக்கள் சிந்தித்து வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
மதிமுக வேட்பாளர் துறை வைகோ பேசியதாவது…..
நேற்று மேற்கு திருச்சி மேற்கு தொகுதியில் மாரியம்மனை வழிபட்டும். இன்று திரு நெடுங்குளத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் தரிசனம் செய்தும் பிரச்சாரத்தை துவக்குவதாகவும் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு தமிழக முதல்வர் வாய்ப்பு அளித்ததால் தான் இந்த 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த சிவன் கோயில் தரிசனம் செய்ய முடிந்தது.
திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதி 80 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளது. மேலும் மகளிர் உரிமை தொகையை 1.15 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்ததும் 1.60 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர் குறைப்பு வாக்குறுதி குறித்து பேசியதோடு ரூ 400 விற்கப்பட்ட கேஸ் தற்போது ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது தற்பொழுது தான் தேர்தலுக்காக 100 ரூபாய் குறைத்துள்ளார்கள் என்றும் அது பெட்ரோல் டீசல் விலையில் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி செலவாகும் ஆனால் மத்திய அரசு நிதி வழங்கவில்லை அது தமிழக அரசு தான் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது.
பத்து வருட ஆட்சியில் பாஜகவினர் எதையுமே செய்யவில்லை என்றும் மத்திய ஆட்சி மாற்றம் நடந்தால் தான் 100 சதவீதம் உங்களின் தேவைகள் பூர்த்தி செய்ய முடியும் அதற்காக தனக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் மாவட்ட கழக நிர்வாகிகள் k.k.k.கார்த்தி திருநெடுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதிசதீஷ்
கூத்தாபார் பேரூர் மன்ற தலைவர் செல்வராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.