திருச்சி கருமண்டபம் ஆர்எம்எஸ் காலனி 5வது தெருவில் வசிப்பவர் கணேசன். ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரெண்டு. இவர் தனது வீட்டின் முன் பகுதியில் புதிதாக வீடு கட்டுமான பணிகளை செய்து வருகிறார். நேற்று மாலை இங்கு வேலை நடந்து கொண்டு இருந்தபோது , திடீரென வீட்டுக்குள் ஒரு பாம்பு புகுந்தது. சுமார் 3 அடி நீளமுள்ள அந்த பாம்பு மூலை ஓரம் பதுங்கியது.
இது குறித்து டிஎஸ்பி வீட்டில் உள்ளவர்கள் திருச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் 5 பேர் அங்கு வாகனத்தில் வந்தனர். இதனால் அந்த தெருவில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அங்கு திரண்டனர். அரைமணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படை வீரா்கள் பாம்பை லாவகமாக பிடித்து சென்றனா்.