Skip to content
Home » திருச்சி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்க கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

திருச்சி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்க கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

திருச்சி ஸ்ரீரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்கம் மற்றும் பாரதிய டிரைவர் டிரான்ஸ்போர்ட் பெடரேஷன் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்க மாநில தலைவர் பத்மராஜ் தலைமை தாங்கினார். பாரதிய டிரைவர் டிரான்ஸ்போர்ட் பெடரேஷன் அகில இந்திய துணை தலைவர் செந்தில் குமார்

வரவேற்றார் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்க மாநில மேற்பார்வையாளர் செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் வேலுமணி, மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோ சிறப்புரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு திருமணங்கள் இயற்றப்பட்டன :-

தமிழக ஓட்டுனர்கள் வெளிமாநிலங்களில் தொடர்ச்சியாக தாக்கப்படுவது மற்றும் அரசு அதிகாரிகளால் பொய் வழக்கு பதிவு செய்வது ஆகியவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓட்டுனர்கள் அனைவரையும் பணி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் அல்லது போக்குவரத்து ஆய்வாளர் மூலம் ஓட்டுனர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!