திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் செவந்திப் பண்ணையை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் 33 வயதான பாலசுப்பிரமணியன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன். இவருடைய மனைவி சென்னையில் 108 ஆம்புலன்ஸில் வேலை செய்து வருகிறார் .பாலசுப்பிரமணியன் ஜேசிபி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.இதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட வந்த பல சுப்பிரமணியன் மன உளைச்சல் அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.