திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே பி.கே. அகரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் நிறுத்தி இருந்த டேங்கர் கண்டனர் லாரி மீது பின்னால் வந்த கேஸ் சிலிண்டர் ஏற்றும் லாரி மோதிய விபத்தில் கேஸ் சிலின்டர் லாரியின் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுக்கா தம்மம்பட்டி மணதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் 62 வயதான முகமது சலீம்.இவர் டேங்கர் கண்டெய்னர் லாரியை ஓட்டிக்கொண்டு திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பி.கே. அகரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையின் ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அம்பேத்கர் தெருவை சேர்ந்த 40 வயதான அருண் கேஸ் சிலிண்டர் ஏற்றும் லாரியை ஓட்டிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்ததார்.
இந்நிலையில் பி.கே அகரம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தி இருந்த டேங்கர் கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த கேஸ் சிலிண்டர் ஏற்றும் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் கேஸ் சிலிண்டர் ஓட்டி வந்த லாரியின் டிரைவர் அருண் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த அருணை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருங்கலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் லாரி பலத்த சேதமடைந்தது.பின்னர் இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.