திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் காவேரி குடிநீர் தட்டுபாட்டை போக்க வேண்டும். தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா.பேட்டை கடைவீதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.