திருச்சி மாவட்டம் ச கண்ணனூர் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 12.87 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணிக்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா. பிரதீப் குமார், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், ஒன்றிய குழுத் தலைவர் ஸ்ரீதர், கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், உதவி இயக்குனர் பேரூராட்சிகள் காளியப்பன், நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் வைரமணி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
