திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மதுராபுரி ஊராட்சியில் வெறிநோய் தடுப்பு முகாமை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் எஸ்தர் சீலா தலைமையில் நடைபெற்றது துறையூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளான நாய்களுக்கு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முசிறி கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் மருத்துவர் முஸ்தபா முன்னிலை வகித்தார் துறையூர் வனசரகர் ரஞ்சித் குமார் .மதுராபுரி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி
ராமராஜ் .மற்றும் சித்திரப்பட்டி அரசினர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அரசு போக்குவரத்து துறை மற்றும் காவல்துறையினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் கால்நடை மருத்துவர் செந்தில்குமார் மருத்துவர்
கனகராஜ் மருத்துவர் மதி மருத்துவர் தனலட்சுமி மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் சுந்தர சுந்தரபாண்டியன் அமுத லட்சுமி சரவணன் கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் டி குமார் சஞ்சீவி விந்தியா திலகவதி ஆகியோர் கலந்து கொண்டு நாய்களுக்கு தடுபூசி செலுத்தினார்கள் இறுதியில் மருத்துவர் தமிழரசி நன்றியுரை கூறினார்.