Skip to content
Home » நாயை சுட்டுக்கொன்ற திருச்சி டாக்டர் கைது..

நாயை சுட்டுக்கொன்ற திருச்சி டாக்டர் கைது..

  • by Authour

திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சையது ஹசன் ஷாகிப் ( 46). யுனானி டாக்டராக இருந்து வருகிறார். அதே பகுதியில் கிளினிக்கும் வைத்து மருத்துவம் பார்த்து வருகிறார். இவர் தான் வைத்துள்ள ஏர் பிக்செல் துப்பாக்கியை கொண்டு அந்த பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை சுட்டுக் கொன்று வந்தாக கூறப்படுகிறது. அப்பகுதியினர் இதனை பலமுறை கண்டித்தபோதும், டாக்டர் சையது அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோல் ஆசிட் கலந்த குடிநீரை வைத்து ஏராளமான நாய்களையும் அவர் கொன்றுள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் பிரபு (26). கடந்த 21-ந்தேதி இரவு காஜாப்பேட்டை ஆலம்தெரு பிரிவுரோட்டில் நின்று கொண்டிருந்த நாய்க்குட்டிக்கு பிஸ்கட் போட்டு விட்டு நடக்க ஆரம்பித்தார். அப்போது ஒரு நபர் திடீரென பிஸ்கெட் சாப்பிட்டுக்கொண்டிருந்த குட்டி நாயை துப்பாக்கியால் சுட்டார். இதில் அந்த நாய் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து செத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு பழனியப்பன் நாயை சுட்டுக் கொன்றது யார்? என பார்த்தார். அப்போது நின்று கொண்டிருந்த சையதுவிடம் நாயை ஏன் சுட்டுக் கொன்றீர்கள் என்று பிரபு கேட்டுள்ளார். உடனே சையது ஹசன் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த பிரபு பழனியப்பன் என்பவர் திருச்சி பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் யுனானி டாக்டர் சையதுவை கைது செய்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *