மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் கலைஞர் கருணாநிதி திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் அறிஞர் அண்ணா, கலைஞர்
கருணாநிதி ஆகியோர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து கழக கொடி ஏற்றப்பட்டு பின்னர் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர்கள் காஜாமலை விஜி, விஜயலட்சுமி கண்ணன், கோட்டத் தலைவர் துர்காதேவி, மற்றும் மாவட்ட, நகர, கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.