திருச்சி மாவட்டம் துறையூர் மத்திய ஒன்றிய சார்பில் திராவிட மாடல் அரசின் 2ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நரசிங்கபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார் கூட்டத்திற்கு வந்தவர்களை கிளைச் செயலாளர் கதிரேசன் வரவேற்றார். துணைவேந்தர் சபாபதி மோகன் சிறப்புரை ஆற்றினார்
துணைவேந்தர் பேசுகின்ற போது திராவிட மாடல் என்பது சாமானியம்
பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவருக்கும் சமத்துவம் வழங்குவது அடுப்பு ஊதிய பெண்கள் இன்று கல்வி கற்பது திராவிட மாடல் அரசின் சாதனை என்றும் கூறினார் மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகின்ற ஜூன் மாதம் முதல் அனைத்து தொடக்க கல்வி நிலையங்களிலும் காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்துள்ளார் இதில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள் பயன்
அடைவார்கள் என்றும் தெரிவித்தார் அரசு பள்ளியில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிட தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளார் என்றும் தெரிவித்துளளார். எண்ணற்ற நல திட்டங்களை வழங்கிவரும் திராவிட முன்னேற்றக் கழக அரசு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40க்கும் 40 இடங்களை வெற்றி பெற வேண்டும் என்று கூறினார் அதற்கு சாமானிய மக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளரும் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான தர்மன் ராஜேந்திரன்
துறையூர் நகர செயலாளரும் திருச்சி மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவருமான மெடிக்கல் முரளி
கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ சரவணன் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரா என்கிற வீரபத்திரன் ஒன்றிய கவுன்சிலர்கள் பேபி லெனின் எம்கே சுபாஷ் சதீஷ் வழக்கறிஞர் ஜெயராஜ் பி.சேகர் சரண்யா மோகன் தாஸ் கஸ்டமர்ஸ் மகாலிங்கம் செல்வராணி மலர் மண்ணன் புனிதா ரவிச்சந்திரன் அமுதா பெருமாள்.அன்பு காந்தி. ராஜேந்திரன் விஸ்வநாதன் கே ராஜேந்திரன் கார்த்திகேயன் பெரியசாமி வரதராஜன்
மற்றும் கிழக்கு மேற்கு மத்திய ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் நன்றி உரையாற்றினார்