திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட எரகுடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலில் வழக்கம் போல் அர்ச்சகர் தனது பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் கோவிலில் நடை சாத்தி உள்ளார். மறுநாள் காலை கோவிலை திறப்பதற்காக வந்தபோது கோவிலின் பிரதான கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தாவிடம் பூசாரி தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவில் தர்மகர்த்தா கோவிலில் உள்ளே உள்ள அர்த்தமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த காணிக்கை உண்டியல் திருடு போனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் திருட்டு சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர் புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இரவில் நோட்டமிட்டு உண்டியலை மறும நபர்கள் திருடி சென்று இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மாரியம்மன் கோவில் உண்டியல் திருடு போன சம்பவம் ஏறகுடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.