திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே உள்ள இந்திரா சுந்தர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ்(58). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் நாமக்கல் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு கோவில் திருவிழாவிற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு உறவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து செல்வராஜூக்கு போனில் தகவல் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஊருக்கு திரும்பினார் செல்வராஜூ . வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் ரூமில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 5 பவுன் நகை மற்றும் பணம் 50 ஆயிரம், டூவீலர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து செல்வராஜ் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.