Skip to content
Home » மஜக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் “தொண்டர் எழுச்சிப் பெருவிழா” – மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு!…

மஜக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் “தொண்டர் எழுச்சிப் பெருவிழா” – மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு!…

மஜக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் “தொண்டர் எழுச்சிப் பெருவிழா” – மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் “தொண்டர் எழுச்சி பெருவிழா” திருச்சியில் நடைபெற்றது. இதனையொட்டி திருச்சி உறையூர் பகுதியில் உள்ள மனிதம் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து வாகனப் பேரணியாக வந்து ஆழ்வார்தோப்பு, பாலக்கரை, ராமகிருஷ்ணா பாலம் அருகில் மற்றும் மஜக மாவட்ட அலுவலக வாசலில் கட்சியின் கொடியேற்றபட்டது. இறுதியாக பாலக்கரை மதுரை ரோடு பகுதியில் மஜக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளர் வல்லம் அஹமது கபீர், மாநிலச் செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர் தாம்பரம் தாரிக், பேராவூரணி சலாம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முகமது ஷரிப், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் சேலம் ரஹ்மான் மற்றும் மாவட்ட செயலாளர் பக்கீர் மைதீன் (எ) பாபு, அவைத்தலைவர் ஷேக் தாவூத், பொருளாளர் சையது முஸ்தபா, துணைச் செயலாளர்கள் திருச்சி தர்வேஷ், ஷேக் அப்துல்லா, அஸ்பாக் அஹமத், ஹபீப் ரஹ்மான், சுரேஷ் காந்தி, இளைஞரணி செயலாளர் ஜமீர் பாஷா, MJVS செயலாளர் ஃபரித் உசேன், MJTS கமால் பாஷா, மனித உரிமை பாதுகாப்பு அணி சுலைமான், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பஷாரத், சுற்றுச்சூழல் அணி ஜாகீர், மருத்துவ சேவை அணி ஷேக், மாணவர் இந்தியா செயலாளர் முகமது ரபிக் உட்பட மாவட்ட பகுதி, துணை, அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *